• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா..,

ByKalamegam Viswanathan

May 30, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சாமி திருக்கோவில் 26 ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து தென்கரை கிராமத்தின் நான்கு ரத வீதிகளை ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது பால்குட ஊர்வலத்தில் தென்கரை கிராம த்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முருகப்பெருமாள் பூசபரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் திருவிழா கமிட்டி திருக்கோவில் சீர்பாதம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.