• Tue. Apr 23rd, 2024

ஆண்டிபட்டி -தேனி அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்!

By

Sep 4, 2021 ,

ஆண்டிபட்டி முதல் தேனி வரையிலான அகல ரயில் பாதை திட்ட பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அதிவேக ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

முதற்கட்ட சோதனையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்ற ரயில் இன்ஜினை பொதுமக்கள் கண்டுகளித்தனர். ‘மதுரை – போடி’ இடையே 90.4 கி.மீ. துார மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு ரூ.450 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், சில ஆண்டுகளாக முடங்கிய இப்பணி கடந்த இரு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆண்டிபட்டி – தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கி.மீ. தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு என கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த மாத இறுதிக்குள் தேனி முதல் சென்னை வரை ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *