சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித். இவர், கடந்த ஆண்டு ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக இலுப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு, போக்ஸோ பிரிவுக்கு 10 ஆண்டுகளும், சிறுமி கடத்தல் பிரிவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.