• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை..,

ByS.Ariyanayagam

May 4, 2026

திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.. இதில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது.

இதை முன்னிட்டு அனைத்துக் கட்சி ஏஜென்ட்களும் பலத்த சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மொபைல் போன்ல எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் கேமராவை பயன்படுத்தவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களும் பலத்த சோதனைகளுக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். வளாகம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.