• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் ஆண்டிபட்டி மாணவர் சாதனை.., இந்து முன்னணியினர் பாராட்டு..!.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர், சென்னையில் நடந்த மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அவரை ஆண்டிபட்டி இந்து முன்னணி அமைப்பினர் நேரில் சென்று பாராட்டினர்.


ஆண்டிபட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குபேந்திரன் மகன் சபரி (16). இவர் இங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார். இதனையடுத்து முழு நேரப் பயிற்சி மேற்கொண்டு ,சென்னையில் நடந்த 16, 17 ,18 வயதினருக்கான 51 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு, 600 பேர் பங்கு பெற்ற இந்த போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.


இதனையடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வந்த மாணவர் சபரியை இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் டாக்டர் .எஸ் பி எம். செல்வம் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் ஜி, மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்குழு மொக்கராசு, ஆகியோர் நேரில் சென்று அவரது வீட்டில் அவருக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருப்பையா, கனகராஜ், முருகேசன், பால்பாண்டி, ராஜேஷ், பிரசன்னா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார். மாணவர் சபரி, இந்து முன்னணி இளைஞர் அணியின் உறுப்பினராக உள்ளார். பல்வேறு இந்து அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, திருச்சியில் நடந்த பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.