18 வயது இளம்பெண் ஒருவர் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் முஸ்கான் (18) பாடல்கள் பாடி அதனை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரூக் என்ற 55 வயது நபர், இவரது வலைதள பக்கத்தை பின்தொடர்ந்துள்ளார்.
முஸ்கானின் குரல் பரூக்கிற்கு பிடிக்கவே, அவரிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறியது. இவரும் முஸ்கானின் வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திடம் நெருங்கி பழகி வந்துள்ளார். முஸ்கானுக்கு பரூக்கை பிடித்துப்போக, வயதை பொருட்படுத்தாமல் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். முஸ்கானுக்கு மறுப்பு தெரிவிக்க மனமில்லாத பரூக்கும் அவரது காதலை ஏற்றுக்கொண்டார்.இதையடுத்து இவர்கள் காதல் விவகாரம் குறித்து குடும்பத்தாரிடம் தெரிவிக்க, அதிர்ந்து போன அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் தனது காதல் மீது நம்பிக்கை கொண்ட அந்த பெண், குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர்.