• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க ராப் பாடகர் சக்சேரி மேடையில் குத்தி கொலை

Byமதி

Dec 20, 2021

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இசைக் கச்சேரியில், வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர் மற்றும் ஹிப் ஹாப் நட்சத்திரம் ஸ்னூப் டோக் உள்ளிட்டோருடன் பாட இருந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சி மேடையின் பின்புறத்தில் டிரேக்கியோ தி ரூலரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனால் உடனடியாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலரின் நிஜப் பெயர் டேரல் கால்டுவெல் (28). கடந்த 2015-ம் ஆண்டு ராப் பாடகராக அறிமுகமான டிரேக்கியோ, அவர் வெளியிட்ட பல பாடல்கள் பாராட்டைப் பெற்றது.

2017-ம் ஆண்டு ஆயுதக் குற்றச்சாட்டிலும், 2018-ம் ஆண்டு தனது 24-வது இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்.

இந்நிலையில், மீண்டும் தனது இசைப் பயணத்தை தொடங்கிய நிலையில் டிரேக்கியோ கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.