மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஷாங்கிலி என்ற மாவட்டத்தில் இருந்து சுமார் ஒன்றரை டன் எடைகொண்ட கஜெந்திரா என்னும் எருமை மாட்டை 80 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டுள்ளது.

பார்க்கவே நன்றாக வளர்ந்து பெரிதாக காட்சி அளிக்கும் இந்த எருமை சுமார் ஒன்றரை டன் எடை கொண்டதாம். இந்த எருமை மாட்டின் எடையை பராமரித்து வருவதற்காக நான்கு வேலை என அதற்கு கரும்பு, புல் உணவாக கொடுக்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையான எருமை மாடுகள் இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில் இருப்பதாக கருத்துகள் தொடரும் நிலையில் பல லட்ச ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்படுகிறதாம். மேலும் இதனை ஏலத்திற்கு விடுவது அரிதான செயலாக கருதப்படுகிறது.