


ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை இந்தியா முழுவதும் இன்று 14.04.25 சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் திமுக கலைஞர் மாளிகையில் அண்ணல் அம்பேத்காரின் திரு உருவப்படத்திற்கு திமுக கழகத் துணை பொதுச் செயலாளரும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரும் சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சி திண்டுக்கல் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். மேலும் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

