



தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து
காவிரி தீர்த்தம் சுமந்தபடி பாதயாத்திரையாக பழனிக்கு வந்திருந்தனர்.

இவர்கள் அடிவாரம் கிரிவீதியில் மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கிரிவலம் வந்து மலையேறினார். மலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் காரணமாக சாமி தரிசனம் செய்ய சுமார் மூன்று மணி நேரம் ஆனது. மலைக்கோயில் பக்தர்களுக்கு வேண்டிய விரைவு தரிசனம், குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை திருக்கோயில் அதிகாரிகள் அலுவலர்கள் செய்திருந்தனர். இன்று மாலை கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திரம் விழா நிறைவு பெறுகிறது.


