• Mon. Apr 28th, 2025

கால்நடைகளை திருடும் சூனா.. பானா.. க்கள் சிசிடிவி காட்சி..,

ByVasanth Siddharthan

Apr 14, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஆடுகள் திருடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைரோடு அம்மைய நாயக்கனூர் பகுதியில் சில நாட்களாக கால்நடைகள் மற்றும் விவசாய மின் மோட்டார் வயர்கள் குறிவைத்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந் நிலையில் அழகம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் கொட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை முகமூடி அணிந்த மர்ம இளைஞர் ஒருவர் முதலில் தோளில் சுமந்து கொண்டும் பின்னர் மற்றொரு ஆட்டை கயிற்றைப் பிடித்து இழுத்து கொண்டு திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு நடித்த திரைப்பட காமெடி பாணியில் ஆடுகளை திருடும் நிஜமான சூனா.. பானாகளை பிடித்து கைது செய்ய அம்மையநாயக்கனூர் போலீசார் நடவடிக்கை எடுத்து தொடர் திருட்டுகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.