• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் போட்டியிடும் கே டி ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,

ByK Kaliraj

Apr 18, 2026

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் . ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாட்சியாபுரம், பேருந்து நிலையம், பைபாஸ் சந்திப்பு சாலை, தேவர் சிலை, திருத்தங்கல் அம்பேத்கர் சிலை காமராஜர் சிலை ,வ. உ. சி. சிலை, தேவர் சிலை ,உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய சரத்குமார்,

நடந்து கொண்டிருக்கும் ஆட்சி அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்
திமுக ஆட்சி என்பது மக்களுக்கு எதிரான, சேவை செய்யாத, எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் நிறைவேற்றாத ஆட்சி

70% வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கூறும் திமுக அரசு தாங்கள் செய்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவு படுத்தினால் என்ன திட்டங்களை நீங்கள் செய்தீர்கள் என்பதை மக்கள் யோசனை

5 லட்சம் கோடி கடனை 10 லட்சம் கோடி கடனாக இரட்டிப்பு செய்த அரசு திமுக அரசு
எதற்காக கடன் வாங்குகிறோம், எதற்காக செலவழித்தோம் எங்கு செலவழித்தோம் என்பதை சொல்ல முடியுமா

அதைக் கேட்டால், நாங்கள் எந்த திட்டத்தை வகுத்தாலும் அதற்கான நிதி இல்லை, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற வார்த்தையை தேய்ந்த ரெக்கார்ட் போல் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்

எதைக் கேட்டாலும் மத்திய அரசு மத்திய அரசு என பலி போடுகிறார்கள்

ஒரு ஆட்சி என்பது மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்ற ஆட்சியாக இருக்க வேண்டும் மக்களைப் பற்றி சிந்திக்காமல் நிதி இல்லை என சொல்கிறார்கள்.

11லட்சம் கோடி மத்திய அரசு தமிழகத்திற்காக தந்துள்ளது தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 72ஆயிரம் கோடி மோடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றால், தமிழகத்தில் எப்படி 16 ரயில்கள் இயங்கும் நிதி வரவில்லை என்றால் மத்திய அரசிடம் சென்று கேட்டால் ஒதுக்கீடு செய்வார்கள்.

நீங்கள் செய்வது எல்லாமே பொய் ஊழல் தானே செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வருவார் பின்னர் அமைச்சராக இருப்பார்.

யார் வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம், சிறைக்கு செல்லலாம் வெளியே வந்து பின்னர் அமைச்சராகலாம் என்ன ஆட்சி இது, இதை மாற்ற வேண்டாமா?

திமுக ஆட்சியில் ஒருபுறம் ஊழல் மறுபுறம் மாணவர்கள் கையில் கஞ்சா 2 லிட்டர் போதை பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.

போதை கலாச்சாரம் தமிழகத்திற்குள் எப்படி வந்தது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்

இளைஞர்களை மூளைச்சலவை செய்து போதைக்கு அடிமையாக்கும் நிலை உள்ளது

5 வயது குழந்தைகள் முதல் 60 வயது மூதாட்டியும் கற்பழிக்கப் படுகிறார்கள்

இளைஞர்கள் சீரழியக்கூடிய அளவில் ஒரு ஆட்சி நடக்கும் போது அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி

அப்பழுக்கற்ற தலைவரான பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தாரை கைது செய்ய தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில் அவரை கைது செய்யப்படவில்லை

காமராஜரை இழிவுபடுத்தியவரை கைது செய்யாத
திமுக ஆட்சியாளர்கள் நாங்கள் பெருந்தலைவர் ஆட்சி அமைப்போம் என சொல்கிறார்கள்

தவறு செய்பவர்கள் கூட இந்த ஆட்சியில் தண்டிக்கப்படுவதில்லை

தவறான ஒன்றை பதிவு செய்கிறார் என்றால் நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

தொகுதி மறு வரையறை அமல்படுத்தினால் நாங்கள் பழைய திமுகவாக மாறிடுவோம் என்கிறார்கள்

நீங்கள் நல்லவர்களையும் வல்லவர்களையும் இழிவுபடுத்தினால் நாங்களும் வேற மாதிரி மாறிடுவோம் அந்த மாதிரி மாற வைத்து விடாதீர்கள்

அந்த மாதிரியான பூமி இல்லை தமிழகம், அமைதி பூங்கா என்று பெயர் எடுத்த பூமியை நீங்கள் வந்து சீரழித்து வைத்திருக்கிறீர்கள்

பழைய திமுகவாக மாறிவிடுவீர்கள் என்றால் அப்படி என்ன செய்தீர்கள் யாரை மிரட்டுகிறார்கள் என்று தெரியவில்லை தமிழைப் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை ஆனால் மோடி பேசி வருகிறார்.

செங்கோலை பாராளுமன்றத்தில் வைக்கிறார் அதையும் ஏளனம் செய்கிறீர்கள் தமிழை பேச முயல்கிறார் ஏளனம் செய்கிறீர்கள்.

மோடி காசி தமிழ் சங்கத்தையும் ராஜராஜ சோழனையும் பெருமைப்படுத்துகிறார்
நீங்கள் என்ன செய்கிறீர்கள், தமிழை வளர்க்க ஆர்வம் கொண்டவர் மோடி

ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும் வரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியை முன்னெடுத்துச் செல்லும் சிறப்பான ஆட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும்.

தமிழகம் மாற வேண்டும், வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மத்தியும் மாநிலமும் ஒன்றாக செயல்பட வேண்டும்.

இரட்டை இஞ்சின் இரட்டை குழல் துப்பாக்கி போல் சிறப்பாக செயல்பட முடியும்

2014 ஆம் ஆண்டு பொருளாதார அடிப்படையில் பத்தாம் இடத்தில் இருந்த இந்தியா இன்று அமெரிக்கா சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறோம் என்றார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மக்கள் ஆதரவு தர வேண்டும் என பேசினார்.