

சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.அரவிந்த் என்பவர் புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்தி வரும் அவர் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்தியுள்ளார். நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் செஸ் விளையாடினார்கள்.தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்துடன் சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் , செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
