சோழவந்தானில் கீழே கிடந்த மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன் இவர் இன்று ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்ற போது எதிரில் மணி பர்ஸ் ஒன்று கீழே கடந்துள்ளது. இதனை எடுத்தவர் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கிருந்த காவலர்கள் ஆட்டோ டிரைவர் காசிமாயனின் நேர்மையை பாராட்டி அவரின் நேர்மையைகௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து அவருக்கு பரிசு வழங்க முன் வந்தனர். ஆனால் பரிசினை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுனர் காசி மாயன் அது தனது கடமை என கூறி வந்தார். கீழே கிடந்த மணி பர்சை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் காசி மாயனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.