• Wed. Nov 6th, 2024

ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியப் பெண் அக்சதா மூர்த்தி

தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.

2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3500 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது.

இவைத்தவிர, சொந்த நிறுவனங்களில் இருந்து அக்சதா மூர்த்தி வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள கென்சிங்டனில் உள்ள 7 மில்லியன் பவுண்டுகள் கொண்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உள்பட குறைந்தது நான்கு சொத்துக்களை வைத்துள்ளார்.

2010 இல் ஃபேஷன் லேபிலான அக்சதா டிசைன்ஸை அக்சதா மூர்த்தி உருவாக்கினார். 2013 இல் அக்சதா மூர்த்தி கணவருடன் சேர்ந்து நிறுவிய கேடமரன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த அவசியமில்லாத நிலையில், தன் கணவரின் மதிப்பு பாதிக்கப்படாத வகையில் தனது வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த உள்ளதாகவும், “மக்கள் தாங்கள் வாழும் உலகத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நல்லது செய்வது நாகரீகமானது.” என்று அக்சதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *