• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அய்யங்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

ByN.Ravi

Sep 10, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, அய்யங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குறுவட்ட போட்டியில் சதுரங்கம், கபடி, தடகள, போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் சதுரங்க போட்டியில், மாதேஸ்வரன் முதலிடம், ஹரீஸ் இரண்டாமிடம், கபடி போட்டியில் 14 வயது பெண்கள் கபடி பிரிவில் முதலிடம், 17வயது பெண்கள் கபடி பிரிவில் முதலிடம், 19 வயது பெண்கள் கபடி பிரிவில் இரண்டாமிடம், தடகள போட்டியில் நிஷா ஈட்டி எறிதலில் முதலிடம், இலக்கியா தடை தாண்டும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்து மதுரையில் நடைபெறும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அருண் ஆகியோரை தலைமையாசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.