• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம்

ByN.Ravi

Sep 10, 2024

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலா ளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் தங்கராஜ், மாவட்ட அவைத்தலைவர் நல்கர்ணன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் கண்ணம்மாள் , மாவட்ட இளைஞரணி சத்தி ய லிங்கேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைச் செயலாளர் அரிமலை வரவேற்றார். இந்த கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் பாலச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதில் ,
நவம்பர் 14ந் தேதி ஆனையூரில் நடைபெறும் கழக பொதுக்கூட்டம் பற்றியும், வாடிப்பட்டியில் கழக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து
கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவிற்கு நன்றி தெரிவித்தும் பேசினார்.
இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் ஏ.கே.மூர்த்தி, சங்கு பிள்ளை, பாண்டி, பூச்சம்பட்டி சூரிய
பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.