• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

செல்வராகவனை புகழ்ந்துதள்ளும் ஐஸ்வர்யா ரஜினி!

செல்வராகவனை ‘வாவ் செல்வா அத்தான் என உறவுமுறையை கூப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி கமெண்ட் பதிவு செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 ஆண்டுகால தனுஷ் உடனான வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து விட்ட போதிலும் செல்வராகவன் மீது அவர் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை சமீபத்தில் அவருடைய பிறந்த நாளைக்கு ஐஸ்வர்யா வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் தற்போது செல்வராகவன் நடித்த ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த போஸ்டரில் ‘வாவ் செல்வா அத்தான் என கமெண்ட் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. தனுஷை பிரிந்தாலும் அவரது குடும்பத்தினர் மீது இன்றும் ஐஸ்வர்யா மரியாதை வைத்து உள்ளார் என்பதையே இந்த கமெண்ட் காண்பிப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்!