

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. பாசிட்டிவ், நெகடிவ் கமெண்ட்ஸ்களை கூறிவரும் மக்கள் மத்தியில், இப்படம் குறித்து திரை பிரபலங்களின் கருத்து..
சிபி சத்யராஜ்
சூர்யா அண்ணா, டைரக்டர் பாண்டிராஜ் சார், சன் பிக்சர்ஸ், அப்பா மற்றும் ஒட்டுமொத்த எதற்கும் துணிந்தவன் டீமுக்கும் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் .
கார்த்தி
எதற்கும் துணிந்தவன் இன்று முதல் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. அண்ணா சூர்யாவின் அன்பான ஃபேன்சுக்கு உண்மையான ஃபீஸ்டாக இருக்கும். ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும் பொழுதுபோக்காக அமையும். டைரக்டர் பாண்டிராஜ் சார் மற்றும் டீமுக்கு வாழ்த்துக்கள்.
வெங்கட் பிரபு
சூர்யா மற்றும் டைரக்டர் பாண்டிராஜ் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த எதற்கும் துணிந்தவன் டீம் சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர். பகல் ஷோவை ஐதராபாத்தில் பார்க்க போகிறேன்.
டி.இமான்
எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிக அருமையாக இருந்தது. படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தது. சராசரி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களும் எந்தவித தயக்கமும் இல்லாமல், எங்கும் நகராமல் தியேட்டரிலேயே இருக்க செய்யும் படமாக இருக்கும்.
எதற்கும் துணிந்தவன் மாஸ் ஹிட் அடையும். பிளாக் பஸ்டர் படமாக அமைவது உறுதியாகி விட்டதாக முதல் நாளே பலரும் கருத்து கூறி வருகின்றனர். மீண்டும் சூர்யா வேட்டி – சட்டையில் கிராமத்து கெட்அப்பில் வந்து காமெடி செய்து அசத்தி இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
