தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றின் பராமரிப்பு பணியின் போது ஐம்பொன்சிலையும், ஒரு கூஜாவும் கிடைத்திருப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
தென்காசி கடையநல்லூர் அருகே போகநல்லூர் பஞ்சாயத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பராமரிப்பு இல்லாத பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றை நேற்று பஞ்சாயத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது, அதில் ஐம்பொன் சிலையும், ஒரு கூஜாவும் கிடந்தது. உடனே, இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன் பேரில் அந்த சிலை மீட்கப்பட்டு, போகநல்லூர் பொது ஊர் சாவடியில் வைக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக சொக்கம்பட்டி போலீசாருக்கும், கடையநல்லூர் தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.