• Tue. Mar 19th, 2024

மஞ்சூரில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தாலும் தொலைத்தொடர்பு ஆதிக்கத்தாலும் அழிந்து வரும்சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கின்ற வகையில் அனைவரும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தங்களது கடைகளின் மேற்புறங்களில் சிறிய கூடுகளைப் போன்று அமைப்புகளை உருவாக்கி சிட்டுக்குருவிகளுக்கு இருப்பிடங்களாக அமைக்க வேண்டும் இந்த உலக சிட்டுக்குருவி தினத்தில் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவையினம்தான் சிட்டுக்குருவி. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.


சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. அதனால் தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.
பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும். மேலும் இன்றைய காலகட்டத்தில் நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மேலும் இதுபோன்ற பெரும்பாலான குடியிருப்புகளில் வெளிக்காற்றானது; வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியைப் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.அதனால், சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. குறிப்பாக சொல்வதென்றால், கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளன.
அவற்றைத் தடுத்து நிறுத்தி, அப்பறவை இனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. மேலும் மனிதர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு முரணான சுற்றுச்சூழல் நடவடிக்கையானது சிட்டுக்குருவியின் அழிவுப் பாதைக்கு அடித்தளமிட்டுள்ளன என்றால் அது மிகையாகாது!
செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது ; செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஒருவேளை அது முட்டையிட்டாலும் அதன் கருவானது முழு வளர்ச்சியை அடைவதில்லை.. அதனால் சிட்டுக்குருவி இனமானது நாளுக்குநாள் அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றன.சிட்டுக்குருவி இனத்தை நாம் அழிவிலிருந்து பாதுகாத்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *