• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக நான்காக உடைந்துள்ளது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ByA.Tamilselvan

Jan 23, 2023

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் அதிமுக இரண்டாக அல்ல நான்காக உடைந்துள்ளது என பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கமல் அறிவிப்பார். அதிமுக இரண்டாக உடையவில்லை, நான்காக உடைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.