• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

ByA.Tamilselvan

Feb 1, 2023

அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றுகாலையில் இபிஎஸ் தனது வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்திருந்தார். இந்நிலையில் மாலை 5 மணிக்கு தனது வேட்பாளரை அறிவிக்கப்போவதாக அறிவித்திருந்தார் ஓபிஎஸ் . இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணி அதிமுக சார்பாக செந்தில் முருகன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பேட்டியிடுவார் என அறிவித்துள்ளார். மேலும் வெற்றி வாய்ப்பு எங்களுக்கே பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளார் .கழக சட்டவிதிப்படி இரட்டை இலை எங்களிடம் தான் உள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி ஒரு வேட்பாளர்,ஓபிஎஸ் ஒருவேட்பாளர் என அதிமுகவுக்கு இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.