நாளை (அக்டோபர் 17) அதிமுக 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறவிருந்த அக்கட்சியின் கூட்டம், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த மூத்த தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனால் நிறுவப்பட்டு, செல்வி ஜெ. ஜெயலலிதாவால் போற்றி பாதுகாக்கப்பட்ட கட்சியாகும். அஇஅதிமுக அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாளை முதல் அஇஅதிமுக நிறுவப்பட்டு 53 வது ஆண்டு தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற இருந்தன. இந்தக் கட்சிக் கூட்டங்கள் புதுச்சேரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் அக்டோபர் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனால் தமிழகங்களிலும், பிற மாநிலங்களிலும் மறைந்த முதல்வர் எம்ஜிஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17 இல் நடக்க இருந்த அதிமுக கட்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார்.
அதிமுக கட்சி நிர்வாகிகள் சிறப்புரை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வின் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பின்படி, இந்தக் கூட்டம் தற்சமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.