

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான பாஜக கூட்டணி என பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு
சென்னையில் இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசும் போது பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றார். எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்பதால் எடப்பாடி பழனிசாமி கருத்தில் தவறில்லை என்றும், 2024 தேர்தலில் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதப்படும், எந்த கட்சி பலமானது என அப்போது தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பால் விலை உயர்வை கண்டித்து வரும் 15-ம் தேதி பாஜக சார்பில் 1,200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், பிரதமரின் தமிழக வருகை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
