அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக பொதுச்செயலாளராகும் இபிஎஸ் .
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தீர்ப்பால் ஆடிப்போயுள்ளது ஒபிஎஸ் தரப்பு.