

அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வெளியானதும் இபிஎஸ் ஆதரவாளர்கள் கோர்ட் வளாகத்தில் ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

