• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிப்பு

ByA.Tamilselvan

Jun 23, 2022

அதிமுக பொதுக்குழு கூட்ட்த்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தில் துவங்கியது. அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது.
ழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானங்களை வாசித்தனர்
இப்போது 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக உரையாற்றினார். பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் 23 தீர்மானமும் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.