
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி, பாரா மெடிக்கல், பி.எஸ்.ஸி நர்சிங் கல்லூரி உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்;திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரி உடனே செயல்படுத்திட வேண்டும், பி.எஸ்.சி நர்சிங், பாரா மெடிக்கல் கல்லூரிகளை உடனடியாக துவக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுகளை உடனடியாக தொடங்கிட வேண்டும், ஆய்வகங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கூடுதலாக எம்.ஆ.ர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும், தேவையான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.
மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பலன்கள் உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், மருத்துவமனைக்கு தினசரி 10 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும், நாள்தோறும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
