• Tue. Nov 17th, 2026

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண் துறை அமைச்சர் வினோத் பேச்சு..,

ByM.JEEVANANTHAM

Nov 17, 2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேணான் பொறியியல் துறை சார்பில் 46 விவசாயிகளுக்கு சுமார் 5 கோடி மதிப்பில் நடவு இயந்திரம், உழவு எந்திரம் உள்ளிட்ட கருவிகளை மானிய விலையில் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவை, வேளாண் துறை அமைச்சர் வினோத், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையிலான கருவிகளை வழங்கினர்.

விழாவில் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், தமிழக வெற்றிக்கழக ஆட்சியை ஏற்பட்டது ஆறு மாதகாலத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . நெல் கரும்பு பால் இவற்றின் ஆதார விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் வேளாண்துறை கருவிகளை மானிய விலையில் பெறுவதற்கு விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தது. ஆனால் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், இடைத்தரகர்கள் யாரும் இன்றி, விவசாயிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து எந்தவித சிக்கலும் இல்லாமல் கருவிகளை பெற்றுள்ளனர்.

விவசாயிகளின் தரம் உயர்வதற்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார், வரும் காலத்தில் விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக அமையும் என்று பேசினார்.