• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக
சார்பில் கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகாட்டி பகுதியில் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வு , பெண்களுக்கு பாதுகாப்பின்மைக்கு காரணமான திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. கைகாட்டி பகுதி குந்தா அதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ், மாவட்ட பிரதிநிதி புகழேந்தி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம், பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், மாணவரணி மாவட்ட தலைவர் தேநாடு ஆனந்த், முன்னாள் பாலக்கோல ஊராட்சி மன்ற தலைவர் மணி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் பிரசாந்த், மஞ்சக்கொம்பை டாக்டர் சிவகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய எஸ்.இ.எஸ்.டி பிரிவு தலைவர் கைகாட்டி சுப்பிரமணி செய்தார்.