• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குன்னூரில் 303 மி,மீ மழை பதிவு..!!-

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்தும் பல பகுதிகளில் வீட்டினுள் மழைநீர் புகுந்தும் பல இடங்களில் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியுள்ளது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பெய்த மழையில் குன்னூர் பகுதியில் மட்டும் 303மி,மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது. வருவாய்துறையினர் மற்றும் தீயனைப்புதுறை,காவல்துறையினர் இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மரங்களை அகற்றியும் ஜேசிபி மூலம் மண்சரிவுகளை அகற்றியும் துரித நடவடிக்கையில் ஈடுப்பட்டனர் .

அதிக மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துள்ளது. மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.