• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை!

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட ஜானகிராமன் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விஷ்ணு காஞ்சி போலீசார், ஜானகிராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.