அதிமுக ஆட்சியில்தான் வத்ராப் பகுதியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று வத்ராப்பில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் வத்ராப் பேரூராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வத்ராப்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான் ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் முன்னிலை வகித்தனர்.
வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி வரவேற்புரையாற்றினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்ற மாபெறும் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கின்றனர். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதிமுக ஆட்சியில் தான் அம்மாவின் ஆணைக்கினங்க முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. வத்ராப் பகுதியில் பிஆர்சி டிப்போ கொண்டு வந்ததும் அதிமுக ஆட்சியில்தான். கொடிக்குளம் பகுதி மக்கள் வத்திராயிருப்பு பகுதி மக்கள் ஒரு பள்ளி சான்றிதழ் வாங்க கூட ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. அந்த நிலையை மாற்றி வத்ராப்பை தனி தாலுகா அலுவலகமாக மாற்றியது அதிமுக ஆட்சியில்தான். புதிய தாலுகா அலுவலகத்திற்கு கட்டிடத்திற்கு கட்டிடம் கட்ட பணம் ஒதுக்கிதும் அதிமுக ஆட்சியில்தான். வத்ராப் பகுதியில் குறுகிய சாலைகளில் எல்லாம் சிமெண்ட் சாலைகள் அமைத்து கொடுத்துக்ளோம். பெரிய சாலைகள் எல்லாம் தார் சாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம். மெயின் சாலையில் எல்லாம் அகலப்படுத்தியுள்ளோம். அதிமுக ஆட்சியில்தான் இங்கு ஆர்டிஓ அலுவலகம் கட்டப்பட்டது. இப்படி பல்வேறு திட்டங்களை வத்திராயிருப்பு பகுதிக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
மம்சாபுரம் பேரூராட்சி, கொடிக்குளம் பேரூராட்சி, சுந்தரபாண்டியம் பேருராட்சி உட்பட 7 பேரூராட்சிகளிலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய 3 ஒன்றிய பகுதிகளிலும் தாமிரபரணி தண்ணீர் கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். புரட்சித்தலைவி அம்மாவிடம் நான் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டம் இந்த பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. வத்ராப் பேரூராட்சியில் யார் சேர்மனாக வர வேண்டும் யார் ஆட்சி செய்ய வேண்டும் யார் கவுன்சிலராக வரவேண்டும் என்ற நல்ல முடிவை வாக்காள பெருமக்கள் நீங்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். வத்ராயிருப்பு பேரூராட்சியில் தகுதியான நபர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்.
2011 க்கு முன்பு வத்ராப் பகுதிகளில் சாலையில் எப்படி இருந்தது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 2011 க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த சாலைகள் எப்படி இருக்கின்றது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த அளவிற்கு அனைத்து சாலைகளையும் புதிதாக போட்டு கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சி வத்ராப் பேரூராட்யில் அமைய வேண்டும். ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தான் வேலை நடக்கும் என்று சில பேர் கூறுவார்கள். பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பினால் பணிகள் நடைபெறும். என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்துவோம். குடிக்க நல்ல தண்ணீர், சுகாதாரமான வாழ்க்கை, பெண்கள் சுகாதார வளாகம், தரமான சாலைகள், புதிய குடியிருப்புகள் உருவாக்குதல், புதிய வடிகால் கட்டுதல் புதிய சிமெண்ட் சாலை போடுதல் போன்ற திட்டங்கள் மூலம் அருமையான பேரூராட்சியாக இந்த பேரூராட்சியை நாங்கள் மாற்றி காண்பிப்போம். இந்த பகுதியில் புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு நான் உறுதுணையாக இருப்போம். உழைக்கின்ற மக்கள் அதிகம் வாழும் பகுதி இந்த வத்ராப் பகுதியாகும். அதேபோல அதிமுக மீது அதிக பாசம் கொண்ட மக்களும் இந்தப் பகுதியில் தான் உள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மீது பாசம் கொண்ட மக்கள் இந்த பகுதி மக்கள். இன்றைக்கு ஓபிஎஸ் எடப்பாடியாரையும் ஆதரிக்கும் இந்தப் பகுதி மீது எங்களுக்கு எப்போதுமே பாசம் உண்டு. நமது வேட்பாளர்கள் அதிமுகவின் சாதனைகளை கூறி தினமும் இரட்டை இலை சின்னத்தை வார்டுகளில் காண்பித்துக் கொண்டே வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், விவசாய அணி மாவட்ட செயலாளர் முத்தையா , வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி முருகன், விருதுநகர் மாவட்ட அமைப்பு சாரா அணிச் செயலாளர் சேதுராமன், கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் சுதர்சன், எம்.கே.சுந்தரம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பேச்சியம்மாள் கிருஷ்ணசாமி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராஜா, பேரூர் கழக துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி இளைஞரணி செயலாளர் கண்ணன் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி மற்றும் பேரூர் கழக அதிமுக வேட்பாளர்கள் வத்ராப் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]