அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி, தென்காசி , விருதுநகர், மதுரை கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் .13, 14ம் தேதிகளில் நடைபெற்றது.
அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகள் 5 இடங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 9 இடங்களிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 6 இடங்களிலும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் என மொத்தம் 24 இடங்களில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 4 ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் கிளை கழக செயலாளர் பதவிக்கும், நகர பகுதிகளில் உள்ள 165 வார்டு செயலாளர் பதவிக்கும் பேரூர் பகுதிகளில் உள்ள 115 பேரூர் கழக செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை நடத்தினர்.

தேர்தல் நடக்கும் பகுதிகளை விருதுந்கர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டனர். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் பேர்ட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.