லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. பட்டியலில் இந்திய நாட்டின் சார்பில் அகமதாபாத் நகரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலின்படி பார்த்தால், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரம் உலகிலேயே செலவு மிகவும் குறைவாக உள்ள நகரமாகும். திரிபோலி (லிபியா), தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்), துனிஸ் (துனிசியா) மற்றும் அல்மாட்டி (கஜகஸ்தான்) ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
ஆறாவது இடத்தில் கராச்சி நகரமும், ஏழாவது இடத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரம் பிடித்துள்ளது. அல்ஜியர்ஸ் (அல்ஜீரியா), பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா), லுசாகா (சாம்பியா) ஆகிய நகரங்கள் எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன.