• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

மீண்டும் ஜோடி சேரும் அதர்வா சற்குணம் காம்போ…

களவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம்.

‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமிது.லைகா நிறுவனத்தின் 22வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு இசை ஜிப்ரான். திருவையாறு பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு துவங்கியது. தற்பொழுது, இந்தப் படம் குறித்த இரண்டு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, முதல் தகவலாக படத்துக்கு ‘பட்டத்து இளவரசன்’ என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இரண்டாவது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ராஜ்கிரண் என்று சொல்கிறார்கள்.கார்த்தி நடிக்க முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விருமன்’. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறாராம் ராஜ்கிரண். அதனால், அதர்வா படத்திற்கு இதுவரை தேதி கொடுக்க வில்லையாம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அதர்வா படத்தைத் தவிர்ப்பதாகவே கூறுகிறார்கள்.