• Thu. Apr 25th, 2024

விவசாயிகளின் நலன் கருதி ‘வேளாண் அடுக்கு திட்டம்’..!

Byவிஷா

Apr 3, 2023

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற ஒரு திட்டத்தினையும் செயல்படுத்த உள்ளது.
இது குறித்து, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை,. உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகதுறை, விதை சான்றளிப்புதுறை, சர்க்கரைதுறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும், கிடைக்கச் செய்யும் வகையில் வலைதளத்தில் விவசாயிகளுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவரம் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அந்தந்த கிராமங்களின் கிராமநிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக் கலை அலுவலர்கள், இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் உரிய கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *