சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதால், காதல் செய்வதற்காக கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக அங்குள்ள சில கல்லூரிகளில் மாணவர்கள் காதல் செய்வதற்காக ஏப்.1 முதல் 7ந்தேதி வரை ஒருவாரம் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வசந்தகால இடைவேளை என அறிவித்த கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் இயற்கையை நேசித்து, காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்துமாறு பரிந்துரைத்தது. மேலும் மாணவர்கள் இந்த விடுமுறை பயணம் குறித்த தகவல்களையும், வீடியோக்களையும் கொண்டுவருமாறு அவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கப்பட்டுள்ளது.