தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஒரே வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகிவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக கிடைக்கவில்லை.
2019ம் ஆண்டு ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய போது அமலாபால் சொந்த பணத்தை கொடுத்து ஆடைபடம் வெளியாக உதவினார். ஆனால் படம் வெற்றியடையவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓடிடி தளங்களுக்கான வெப் சீரீஸ் தொடர்களில் நடித்து வந்தார். தமிழில் மீண்டும் கதாநாயகி வாய்ப்புக்களை பெற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக ஆடை குறைத்து பிகினி உடையில் புகைப்படங்களை விதவிதமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தமிழ் பட வாய்ப்புக்கள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமலா பால் நடித்த ‘கடாவர்’ திரைப்படம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி நேரடியாகவெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.
கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி தனது தலைமையில் குழு அமைத்து விசாரிக்கிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் எப்படி கண்டறிகிறார் என்பதுதான் படத்தின் கதை.