

பாலிவுட்டில் ஒளிபரப்பாகி வரும் காபி வித் கரண் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா உடனான காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.பாலிவுட்டில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் கரண். இதன் 7 வது சீசனில், நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், நடிகர் விஜய் தேவர கொண்டாவிடம் பல அந்தரங்கமான கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா மந்தனா உடனான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில்கூறிய விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா எனது டார்லிங், என்னோட நெருக்கமான தோழி, அவருடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளேன், அவரை நேசிக்கிறேன் அவ்வளவுதான் என கூறி காதல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர்கள் இருவரும், கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்த போது ரியல் ஜோடிகளாக பேசப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
