• Tue. Dec 10th, 2024

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!….

ByA.Tamilselvan

Jan 11, 2023

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடல்நலம் குன்றியதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.