• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சட்டசபைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த இபிஎஸ்

ByA.Tamilselvan

Jan 11, 2023

இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதுபற்றி முறைப்படி சபாநாயகரிடம் கடிதமும் கொடுத்தனர். ஆனால் இருக்கையை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவெடுக்கவில்லை. இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்றும் அ.தி.மு.க.வினர் சபாநாயகரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் இருக்கை மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு செயல்களை கண்டித்து கருப்பு சட்டை அணிந்ததாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.