• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

விஷால் படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்

Byமதி

Sep 29, 2021

நடிகர் விஷால் தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் ‘விஷால் 32’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இதை தொடர்ந்து, விஷால் அடுத்ததாக த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’விஷால் 33’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவிருக்கிறது என்று விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் விரைவில் ‘எனிமி’, ‘வீரமே வாகை சூடும்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளன.