தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஈழப்பெண் ராஜியாக நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ’சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் தனது ட்விட்டரில் ரசிகர்களுடனான கேள்வி பதிலின்போது ரசிகர் ஒருவர் ”‘தி ஃபேமிலிமேன் 2’ வில் சமந்தாவின் நடிப்பைப் பற்றிக்கூறுங்கள்” என்று கேட்டதற்கு “சமந்தாவின் நடிப்பை முழுமையாக நேசித்தேன். சமந்தாவுடன் விரைவில் நடிக்க விரும்புகிறேன்” என்று உற்சாகமுடன் பதிலளித்துள்ளார்.