

என்ன மனுஷன்யா நீ…அப்படின்னு திரையில பார்த்து மக்கள் திட்டி தீர்த்திருப்பார்கள்..ஆனால் அதே மக்கள் நல்ல மனுஷன்யா…அப்படின்னு சொல்ற அளவுக்கு நிஜ வாழ்கையில் பல உதவிகளை கண் இமைக்கும் நேரத்தில் செய்து வருகிறார் நடிகர் சோனு சூட்.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் சோனு சூட் கொரோனா பரவலுக்கு பின்னர் பல மக்கள் கொண்டாடும் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு உதவி செய்தார், இன்றும் செய்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் யாராவது உதவி கேட்டாலும் உடனே செய்கிறார். இந்நிலையில் அவர் செய்த உதவி குறித்த வீடியோ மக்களை கவர்ந்துள்ளது.சமீபத்தில் அவர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா மாவட்டத்திற்கு காரில் சென்றார். அப்போது, விபத்தில் சிக்கிய 19 வயது இளைஞர் ஒருவர் தன் காரில் சுயநினைவில்லாமல் இருந்ததைப் பார்த்தார். உடனே அந்த நபரை தூக்கிச் சென்று தன் காரில் வைத்து மருத்துவமனையில் அனுமதித்தார்.அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் அனைவரும் சோனு சூட்டை பாராட்டி வருகிறார்கள்.
https://www.instagram.com/tv/CZv1lzgI2HQ/?utm_source=ig_web_copy_link
