இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மதரீதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972-ல் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, கோயிலின் நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையில் கோயிலுக்கு வரும் போது இது போன்ற ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று விளம்பரப்பலகையில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில்களுக்கு வருபவர்கள் மரபுப்படி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர். கோயில்களுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டினர். நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டி கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா அல்லது மத ரிதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்?
மேலும், அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? , ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது ?, குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோயிலில் உள்ளது எனவும் கேள்வி எழுப்பினர். அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார்கள் உள்ளதா? , ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது. மனுதாரரின் கோரிக்கை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாக உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
- ‘உன்னால் என்னால்’ விமர்சனம்சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் […]
- மணலியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாள ஆசாமிகள் கைது..!மணலியில் ஆன்லைன் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மணலியில் […]
- ஜியோ மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்கசென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!சென்னையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள ஜியோ நிறுவன மொபைல் டவரின் 2வது தளத்தை இடிக்க […]
- மே மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பேர் பயணம்..!சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 4 மாதங்களை விட, மே மாதம் அதிகமான பயணிகள் பயணம் […]
- சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் […]
- “காவிஆவி நடுவுல தேவி ” படத்தின் டிரெய்லரைசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்எழுச்சி இயக்குனர் வி.சி.குகநாதன் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் […]
- மேகதாது விவகாரத்தில் தி.மு.க – காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது..,ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு..!கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும், […]
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம்..!கன்னியாகுமரியில் கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று […]
- நேர்த்தி என்பது நம்மிடம் இல்லை இயக்குநர் செல்வராகவன்‘என்.ஜி.கே’ படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வராகவன் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.செல்வராகவன் […]
- நாயகி பேசும் வசனமே மிரட்டல்..!” – நாயகன் சித்தார்த் பாராட்டு!பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, […]
- இன்று உலக பெற்றோர்கள் தினம்..!உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று […]
- இன்று இயந்திரங்களின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த..,நிக்கலாஸ் லெனார்ட் சாடி கார்னோட் பிறந்த தினம்நடைமுறை இயந்திரங்களின் அடிப்படையாக உள்ள பெரும் புகழ் வாய்ந்த கார்னோட்வின் நான்கு-நிலை-சுழற்சி கண்டறிந்த நிக்கலாஸ் லெனார்ட் […]
- சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. […]
- சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் […]
- குமரியில் அமைச்சரைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!பாரதப் பிரதமர் நரேந்தி மோடியை அவதூறாக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை […]