தமிழ் சினிமாவில் புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் ஆர்.பி சௌத்ரியின் மகன் ஜீவா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆர். பி சௌத்ரி தயாரித்திருக்கும் புதிய படத்திற்கு வரலாறு முக்கியம் என வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய் மற்றும் ஜீவா, சுந்தர் சி ஆகியோர் மூவர் கூட்டணியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் புதிய படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஜீவா தற்போழுது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஹா ஓடிடித் தளத்தில் ‘சர்கார் வித் ஜீவா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் ரசிகர்கள் “கச்சேரி களைகட்டப்போகுது, மச்சி ஒரு மைக் சொல்லேன்” என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.