சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக இருப்பவர் தி லெஜண்ட் சரவணன். இதனாலோ என்னவோ இந்த தி லெஜண்ட் படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஜெ.டி. ஜெர்ரி இயக்கத்தில் புதுமுக நடிகர் நடிக்க தயாரான இப்படம் மொத்தம் ரூ. 45 கோடி செலவில் உருவாகியுள்ளது. முதல் படத்திற்கே இத்தனை கோடி செலவா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படமும் கடந்த ஜுலை 28ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து இப்போது படக்குழு படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனால் படத்தை பிரபல நிறுவனத்திற்கு ரூ. 45 கோடிக்கு விற்றுள்ளார்களாம்.