தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் உலக பைக் பயணத்தை துவங்கியுள்ளார் .பைக் பயணத்தில் அஜித் செல்லும் புகைப்பட காட்சிகள் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில் “துணிவு” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் இங்கிலாந்துக்கு பைக் பயணமாக சென்றார். அதே போல இமயமலைப்பகுதியில் அவரது பைக் பயணங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.இப் படத்தில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பலர் நடித்துள்ளனர்.. எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் ‘துணிவு”திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் ரீலிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வந்தது. மேலும் தற்போது தாய்லாந்து நாட்டில் தன்னுடைய உலக பைக் பயணத்தை நேற்று முன் தினம் அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
அங்கு மொத்தம் 6 நாட்கள் பைக் பயணத்தை அஜித் மேற்கொள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் பணத்தில் நடிகர் அஜித் செல்லும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
